என்னை மறைக்கவும்

கருத்தடை

நீங்கள் என்ன முடிவு செய்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் கருத்தடை தெரிவு கருத்தில் கொள்வது அவசியமானதாகும்.

கருக்கலைப்பு அல்லது பிறப்புக்குப் பிறகு, உடனடியாகக் கருத்தடையை ஆரம்பிக்கலாம். பல கருத்தடை வழிமுறைகள் உள்ளன. நீண்டகால செயல்பாடுள்ள மீளக்கூடிய கருத்தடை முறைகள் மிகவும் பயனுள்ளவையாகும். கருத்தடை சாதனத்தை உடலின் உள்ளே பதித்தல் (‘இம்ப்ளானொன்’ - Implanon) மற்றும் கருப்பைக்குள் சாதனங்களை வைத்தல் (IUDக்கள்) ஆகியவை இதில் அடங்கும்.

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பல்வேறு கருத்தடை விருப்பங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை குடும்பக் கட்டுப்பாடு என்.எஸ்.டபிள்யு இணையதளத்தில் காணலாம்: https://www.fpnsw.org.au/health-information/individuals/contraception

1800 008 463 என்ற ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பூடாக ஒரு இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார செவிலியருடன் நீங்கள் பேசலாம். செவிலியரிடம் பேசுவது இரகசியமாகவும் அநாமதேயமாகவும் இருக்கும்.