என்னை மறைக்கவும்

கருக்கலைப்பு மற்றும் சட்டம்

ஆஸ்திரேலியாவில், பதிவுசெய்யப்பட்ட மருத்துவரால் செய்யப்படும்போது, சில சூழ்நிலைகளில், அனைத்து மாநிலங்களிலும் பிராந்தியங்களிலும் கருக்கலைப்பு சட்டபூர்வமானதாகும்.

என்.எஸ்.டபிள்யு (NSW)-இல், 2019-ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சீர்திருத்தச் சட்டம் (Abortion Law Reform Act 2019) இயற்றப்பட்டதன் மூலம், 2019 அக்டோபர் மாதத்தில் 1900-ஆம் ஆண்டின் குற்றச் சட்டத்திலிருந்து (Crimes Act of 1900) கருக்கலைப்பு நீக்கப்பட்டது. என்.எஸ்.டபிள்யு (NSW)-இல் உள்ள மருத்துவர்கள், உங்கள் தகவலறிந்த ஒப்புதலுடன், கர்ப்பம் தரித்து 22 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம்.

கர்ப்பம் தரித்து 22 வாரங்களுக்குப் பிறகு, ஒரு மருத்துவமனையிலோ அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையத்திலோ, மற்றொரு மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னர் ஒரு சிறப்பு மருத்துவரால் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.

கருக்கலைப்பு உங்களுக்குச் சிறந்த வழி என்பதை முடிவு செய்ய உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் மட்டுமே உரிமை உள்ளது. தகவலறிந்த ஒப்புதல் என்றால், செயல்முறையையும் மற்றும் அதன் சாத்தியமான அபாயங்களையும் சிக்கல்களையும் புரிந்துகொண்டதன் பின்னர் ஒப்புதலை வழங்குவதாகும்.

2019 ஆம் ஆண்டின் கருக்கலைப்பு சீர்திருத்தச் சட்டத்தின்படி (Abortion Law Reform Act 2019), பாலினத் தேர்வின் ஒரே நோக்கத்திற்காக கருக்கலைப்பை வழங்க முடியாது, மேலும் இந்தக் காரணத்திற்காக கருக்கலைப்பு சேவைகளுக்கு பரிந்துரைகளை வழங்க முடியாது.

2019 ஆம் ஆண்டின் கருக்கலைப்பு சீர்திருத்தச் சட்டம் (Abortion Law Reform Act 2019) கோருவது என்னவென்றால், கருக்கலைப்பைச் செய்ய அல்லது அதற்கு உதவ மறுக்கும் மருத்துவர் (பொது மருத்துவர் போன்றவர்கள்) கட்டாயம் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:

  • மனசாட்சியின்படி மறுப்புத் தெரிவிக்காத ஒரு மருத்துவரை எவ்வாறு கண்டுபிடிப்பது அல்லது தொடர்புகொள்வது என்பது பற்றிய தகவல்களை அந்த நபருக்குக் கொடுக்க வேண்டும், அல்லது
  • அந்த நபரின் பராமரிப்பை வேறொரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவருக்கோ அல்லது கருக்கலைப்பு செய்யக்கூடிய மற்றும் மனசாட்சியின்படி மறுப்புத் தெரிவிக்காத மற்றொரு சுகாதார சேவைக்கோ மாற்ற வேண்டும்.

ஒரு பெண்ணை, 1800 008 463 என்ற ‘பிரகனன்சி சாய்சஸ்’ (Pregnancy Choices) உதவி இணைப்பிற்கோ அல்லது ‘பிரகனன்சி சாய்சஸ்’ (Pregnancy Choices) இணையதளத்திற்கோ வழிகாட்டுவதன் மூலம், தகவல்களை வழங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் தேவையானது நிறைவேற்றப்படுகிறது.

உங்கள் மருத்துவர் இதைச் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், என்.எஸ்.டபிள்யு சுகாதார புகார்கள் ஆணையம் (Health Care Complaints Commission) அல்லது ஆஸ்திரேலிய மருத்துவர் ஒழுங்குமுறை முகமை (Australian Health Practitioner Regulation Agency - AHPRA). வாயிலாக நீங்கள் புகாரளிக்கலாம்.