என்னை மறைக்கவும்

நீங்கள் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்துகொள்ளுதல்

நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தால், முன்கூட்டியே கர்ப்பப் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியமானதாகும்.

சிறுநீர் அல்லது இரத்த மாதிரி மூலமாக கர்ப்பப் பரிசோதனையை செய்யலாம். சிறுநீர் கர்ப்ப பரிசோதனை சாதனம் ஒன்றை மருந்தகம் அல்லது பல்பொருள் அங்காடியில் நீங்கள் வாங்கி, அதன் உறையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உங்கள் உள்ளூர் குடும்பக் கட்டுப்பாடு என்.எஸ்.டபிள்யு மருத்துவ நிலையம், பொது மருத்துவ நிலையம், மகளிர் சுகாதார மையம் அல்லது சுகாதார சேவை மூலம் இரத்த மாதிரி ஊடான கர்ப்பப் பரிசோதனையைச் செய்யலாம்.

நீங்கள் கர்ப்பமாகியிருப்பதை எவ்வளவு விரைவில் கண்டறிகிறீர்களோ, உங்கள் கர்ப்ப விருப்பங்களைப் பற்றி சிந்திக்க அவ்வளவு அதிகமான நேரம் உங்களுக்குக் கிடைக்கும்.

நீங்கள் எவ்வளவு காலம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிதல்

நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக (கர்ப்பந்தரித்திருத்தல்) இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியமானதாகும். நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய, உங்கள் கடைசி மாதவிடாயின் முதல் நாள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, உங்கள் கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து நான்கு வாரங்கள் ஆகியிருந்தால், அது 4 வார கால கர்ப்பமாகும். நீங்கள் எவ்வளவு காலம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான மிகவும் துல்லியமான வழி அல்ட்ராசவுண்ட் செய்துகொள்வதாகும்.

நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அல்ட்ராசவுண்ட் உங்களுக்குத் தெரிவிக்கும், இது உங்கள் கர்ப்ப தெரிவு புரிந்துகொள்ள உதவும்.

கர்ப்ப பரிசோதனை அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ஆகியவற்றை எங்கு செய்யலாம் என்பதைக் கண்டறிய 1800 008 463 என்ற எண்ணில் ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அழைக்கவும்.