கர்ப்பமானது பெரும்பாலும் திட்டமிடப்படாமலே உண்டாகலாம்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ திட்டமிடப்படாமல் கர்ப்பமானால், பிரகனன்சி சாய்சஸ் ஹெல்ப்லைன் ஆனது கர்ப்ப விருப்பத்தெரிவுகள் குறித்த இலவசமான, பாரபட்சமற்ற மற்றும் இரகசியமான தகவல்களை வழங்கும்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை 1800 008 463 என்ற எண்ணில் ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அழைத்து சுகாதார நிபுணர்களில் ஒருவருடன் பேசுங்கள்.
உங்கள் மொழியில் யாரிடமாவது பேச வேண்டுமென்றால், 131 450 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவையை (TIS) அழையுங்கள். ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்புடன் உங்களை இணைப்க்குமாறு அவர்களிடம் கேளுங்கள்.
தேசிய தந்திச் சேவை மூலமாக ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அணுக:
குரல் ஊடான தகவல் பரிமாற்றத்திற்கு 1300 555 727 என்ற எண்னை அழைக்கவும்
தொலைதூரத்தட்டச்சிற்கு (TTY) 133 677 என்ற எண்னை அழைக்கவும்
குறுஞ்செய்தியை 0423 677 767 என்ற எண்ணுக்கு அனுப்பவும்