என்னை மறைக்கவும்

மருத்துவர்களுக்கான கருக்கலைப்பு

2019 ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சீர்திருத்தச் சட்டம் (ABORTION LAW REFORM ACT 2019) என்றால் என்ன?

நியூ சவுத் வேல்ஸில், கருக்கலைப்பு குறித்த சட்டமானது 2019-ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சீர்திருத்தச் சட்டத்தால் (Abortion Law Reform Act 2019) நிர்வகிக்கப்படுகிறது. இது, 1900 ஆம் ஆண்டின் குற்றச் சட்டத்தை மாற்றி, கர்ப்பத்தைக் கலைப்பது (கருக்கலைப்பு) தொடர்பான சட்டத்தின் விதிகளை அதிலிருந்து நீக்கி, கருக்கலைப்பு தொடர்பான பொதுவான சட்டக் குற்றங்களை அகற்றியுள்ளது.

கருக்கலைப்பானது ஒரு குற்றவியல் பிரச்சினையாக கருதப்படாமல் ஒரு சுகாதாரப் பிரச்சினையாக கருதப்படுகிறது ஏன்பதை 2019-ஆம் ஆண்டின் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. அந்தச் சட்டம்:

  • கருக்கலைப்புக்கான சுகாதாரத்தை மையப்படுத்திய அணுகுமுறையை ஏற்படுத்துகிறது
  • இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் சுய விருப்பம் உட்பட, பெண்ணின் ஆரோக்கியத்திற்கான உரிமையை ஆதரிக்கிறது
  • கருக்கலைப்புகள் செய்யும் மருத்துவர்களுக்கு தெளிவையும் பாதுகாப்பையும் வழங்குகிறது

என்.எஸ்.டபிள்யு (NSW)-இல் உள்ள மருத்துவர்களைப் பொறுத்தவரையில், இவ்வாறான மாற்றங்கள் எதைக் குறிக்கின்றன?

2019-ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சீர்திருத்தச் சட்டமானது, 22 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இல்லாத ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவரை அனுமதிக்கிறது.

22 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு ஒரு சிறப்பு மருத்துவரால் கருக்கலைப்பு செய்யப்படலாம், மருத்துவர்:

  • அனைத்து சூழ்நிலைகளிலும், கருக்கலைப்பு செய்வதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன என்று கருத வேண்டும், மற்றும்
  • மற்றொரு சிறப்பு மருத்துவருடன் கலந்தாலோசித்திருந்து, அவரும் அனைத்து சூழ்நிலைகளிலும், கருக்கலைப்பு செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என்று கருத வேண்டும்.

மேலும், தேவைப்பட்டால், பல்துறை ஆலோசனைக் குழு அல்லது மருத்துவமனை ஆலோசனைக் குழுவுடன் சிறப்பு மருத்துவர் கலந்தாலோசிக்கலாம்.

அவசரகாலத்தைத் தவிர, 22 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள ஒருவரின் கருக்கலைப்பானது குறிப்பிட்ட பொது மருத்துவமனைகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலேயே செய்யப்பட வேண்டும்.

மருத்துவர், செவிலியர், மகப்பேற்று செவிலியர், மருந்தாளுநர், அல்லது பழங்குடியின மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் மருத்துவர், அல்லது விதிமுறைகளால் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் போன்ற, பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பயிற்சியாளரால் கருக்கலைப்பு செய்யப்படுவதற்கு உதவலாம் என்று சட்டம் அங்கீகரிக்கிறது. அதாவது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்தை வழங்குவதன் மூலம் ஒரு மருந்தாளர் கருக்கலைப்புக்கு உதவலாம்.

கர்ப்பத்தை கலைப்பதற்கு (கருக்கலைப்பு), ஒரு மருத்துவர் மனசாட்சிப்படி மறுப்புத் தெரிவித்தால் என்ன நடக்கும்?

கருக்கலைப்புப் பற்றி ஆலோசனை வழங்குமாறு, அல்லது கருக்கலைப்பு செய்யுமாறோ, அதற்கு உதவுமாறோ அல்லது அது பற்றி ஆலோசனை வழங்குமாறோ கேட்டுக்கொள்ளப்படும் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட மருத்துவரும், கருக்கலைப்பை தான் மனசாட்சிப்படி மறுப்பதாக சரியான நேரத்தில், வேண்டுகோள் விடுத்த நபரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்யுமாறு அல்லது கருக்கலைப்புப் பற்றி ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டால், அந்த மருத்துவர் தாமதமின்றி பின்வருபவற்றைக் கட்டாயம் செய்யவேண்டும்:

  1. கருக்கலைப்பு செய்வதற்கு மனசாட்சிப்படி மறுக்காதவர் என்று நம்பும் ஒரு மருத்துவரை எவ்வாறு கண்டுபிடிப்பது அல்லது தொடர்புகொள்வது என்பது குறித்து பெண்ணுக்கு தகவல் வழங்க வேண்டும்; அல்லது
  2. கருக்கலைப்புக்கு மனசாட்சிப்படி மறுப்பு தெரிவிக்காமல் கேட்டுக்கொண்ட சேவையை வழங்கும் மற்றொரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவருக்கு அல்லது சுகாதார சேவை வழங்குநருக்கு பெண்ணின் பராமரிப்பை மாற்ற வேண்டும்.

‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பு போன்ற என்.எஸ்.டபிள்யு சுகாதார ஆதரவு தகவல் சேவையின் விவரங்களை பெண்ணிடம் வழங்குவதன் மூலம் பெண்ணுக்கு தகவல்களை வழங்கும் தேவையை, மனசாட்சிப்படி மறுப்பு தெரிக்கும் ஒரு மருத்துவர் பூர்த்தி செய்யலாம்.

இந்தச் சேவையால் கருக்கலைப்பு செய்வதற்கு மனசாட்சிப்படி மறுப்புத் தெரிவிக்காத மருத்துவர்கள் பற்றிய தகவல்களை வழங்க முடிகிறது; அத்துடன் இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதாரத்துக்கான பொதுவான தகவல்களையும், ஆதரவு சேவைகளையும் வழங்க முடிகிறது.

தகல்களை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நோயாளிகளுக்குக் கொடுக்கலாம். கர்ப்பத்தைக் கலைக்கும் சேவை வழங்குநர்கள் குறித்த தகவல்களுக்கு, 1800 008 463 என்ற ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை தொடர்புகொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் பெண்களுக்கு அறிவுறுத்தலாம்.

பாலினத் தேர்வின் ஒரே நோக்கத்திற்காக கர்ப்பத்தைக் கலைத்தல்

2019-ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சீர்திருத்தச் சட்டத்தின்படி (Abortion Law Reform Act 2019), கர்ப்பத்தைக் கலைக்காமல் விடுவது குறித்த பெண்ணின் உடல்நலம் அல்லது பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றாலே தவிர, பாலினத் தேர்வின் ஒரே நோக்கத்திற்காக கர்ப்பத்தைக் கலைக்கும் சேவை கட்டாயம் வழங்கப்படக் கூடாது. எல்லா சந்தர்ப்பங்களிலும், பெண்ணின் உடல் மற்றும் மன நலனே மருத்துவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

கல்வி மற்றும் பயிற்சி

என்.எஸ்.டபிள்யு (NSW)-இல் கர்ப்பத்தைக் கலைப்பது பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பினால், குடும்பக் கட்டுப்பாடு என்.எஸ்.டபிள்யு (NSW)-இன் மூலஆதாரங்களை ஆராயவும்.